சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்தவர் கைது
ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்;
Update: 2023-12-22 10:18 GMT
எரிசாராயம் வைத்திருந்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் வட ஆலப்பாக்கம் கூட்டுரோடு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசார் நிற்பதை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி பிடித்து, அவரை சோதனை செய்தபோது, சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் முரளி என்ற தவக்களைமு ரளி (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து முரளி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.