இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக புதிய கிளைகள் தொடக்கவிழா

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பாக புதிய கிளைகள் தொடக்கவிழா மாநில தலைவர் பொறுப்பேற்றனர்

Update: 2023-12-10 11:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக புதிய கிளை தொடக்கவிழா மாவட்ட தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது. இந்

த தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் இராபர்ட் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த நிகழ்சியின் இறுதியில் மாநில பொதுச்செயலாளர் தலைமையில், தற்போதம் தமிழக அரசு கடந்த 2001 தேர்தல். அறிக்கையில் வாக்குறுதி எண் 311 ல் குறிப்பிட்டத்து போல் சமவேலைக்கு சம ஊதியம் பாதிக்கப்பட்ட 20000 இடைநிலை ஆசிரியர்க்ளுக்கு வழங்கப்படும்" என்ற வாக்குறுதியை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு விரைவில் சரிசெய்து கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர் வரும் 2024 ஜனவரி மாதத்திற்குள் இதற்கெனை அமைக்கும் பட்ட மூவர குழுவின் அதிர்கையைப் பெற்ற நடைமுறைப்படுத்திடவேண்டும்,

அரசின் நடவடிக்கை தாமதமாகும் நிலையில் 14 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் நாங்கள் எங்கள் இயக்க பொதுக்குழு வினை கூட்டி விரைந்து தங்களது இந்த முக்கியமான கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு மீண்டும் எடுத்து செல்வோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் துணைத்தலைவர் சந்தனகலா, செயலாளர் சுகுமார், துணைசெயலாளர் வெங்கடேஷன், பொருளாளர் கதிரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் காளீஸ்வரி, பஞ்சவர்ணம், மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாத், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி, தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News