குமரியில் தொடர் மழை:  13 வீடுகள் இடிந்து சேதம்

Update: 2023-11-24 07:20 GMT
திற்பரப்பு அருவியில் வெள்ளம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. 2000-க்கு மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி உள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகள் மற்றும் பாசன குளங்களின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

இன்றும் காலை முதல் மழை பெய்யத்தொடங்கியது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். பெருஞ்சாணி அணையில் இருந்து இன்று உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 4 அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 13 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

Tags:    

Similar News