திட்டக்குடி பகுதியில் அம்மை பரவல் அதிகரிப்பு
திட்டக்குடி பகுதியில் அம்மை பரவல் அதிகரித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 15:04 GMT
கோப்பு படம்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவி பெரியவர்களை பாதித்து வந்தது. இந்த நிலையில் தற்போது பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதனால் 10 வயது வரையிலான குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து திட்டக்குடி தலைமை மருத்துவர் கூறுகையில் தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வருவது குறைவு, இளநீர் போன்ற பானங்கள், திராட்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவையுள்ள பழங்கள் சாப்பிட்டால் பாதிப்பு குறையும், காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.