நிறுவனங்கள் வளர்ச்சிக்கு இன்குபேஷன் மையம் துணை புரிய வேண்டும் - ஜவுளித்துறை இணை செயலாளர்
தொழில்நுட்ப ஜவுளி துறையில் தேவைகள் இருப்பதால் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு இன்குபேஷன் மையம் துணை புரிய வேண்டும் என ஜவுளித்துறை இணை செயலாளர் கூறினார்.
திருப்பூர், தொழில்நுட்ப ஜவுளித்துறையில் உலகளவில் அதிக தேவை இருப்பதால் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு அடல் இன்குபேஷன் மையம் துணை புரிய வேண்டும் என மத்திய ஜவுளித்துறை இணை செயலாளர் அஜய் குப்தா பேசினார். திருப்பூர் முதலிபாளையத்தில் அடல் இன்குபேஷன் மையம் அடல் இன்னோவேஷன் மிஷன் உதவியுடன் நிப்ட் டீ கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் புத்தாக்க நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகள், ஆய்வக வசதிகள், தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனை மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்களை அணுக பயற்சி அளிக்கப்படுகிறது. மத்திய ஜவுளி துறை இணை செயலாளர் அஜய் குப்தா, நிப்ட்டீ அடல் இன்குபேஷன் மையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகளை ஆய்வு செய்தார்.
இது குறித்து மத்திய ஜவுளித்துறை இணை செயலாளர் அஜய் குப்தா பேசியதாவது:- புத்தாக்க நிறுவனங்கள் இவ்வசதிகளை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை சந்தைக்கு ஏற்றவாறு உருவாக்க வேண்டும். வளம் குன்றா வளர்ச்சியை நோக்கி செயல்படும் புத்தாக்க நிறுவனங்களின் எதிர் காலம் சிறப்பானதாக அமையும். தொழில் நுட்ப ஜவுளித் துறையில் உலக அளவில் அதிக தேவைகள் இருப்பதால் அத்துறை சார்ந்த புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இன்குபேஷன் மையம் துணை புரிய வேண்டும் மற்றும் நிப்ட்டீ கல்லூரியில் தொழில் நுட்ப ஜவுளி சார்ந்த படிப்புகளை வழங்குவதற்கான சாத்திய கூறுகளை ஆராய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நிப்ட்&டீ அடல் இன்குபேஷன் மையம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு குழு தலைவருமான செந்தில் குமார் பேசியதாவது:- புத்தாக்க நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இம்மையம் செய்யும் என்று உறுதியளித்தார். மேலும் கடந்த 6 ஆண்டுகளில் 84 புத்தாக்க நிறுவனங்களை நிப்ட்டீ அடல் இன்குபேஷன் மையம் ஸ்டார்ட்அப் பயற்சி அளித்துள்ளதாகவும், 23 புத்தாக்க நிறுவனங்கள் பயற்சி முடிந்து தன்னிறைவு நிலையை அடைந்துள்ளதாகவும், 6 புத்தாக்க நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் இந்தியா நிதி ரூபாய் 1 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரம், 3 புத்தாக்க நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் நிதி ரூபாய் 45 லட்சம், 12 புத்தாக்க நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன நிதி ரூ.26.96 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. என்றார். இந்நிகழ்வில் புத்தாக்க நிறுவனங்கள் இயற்கை ரப்பர் மூலம் எலாஸ்டிக், பருத்தி நூலின் மூலம் லேபிள் உற்பத்தி, பட்டு நூலில் மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட கண்டுபிடிப்புகள்காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அடல் இன்குபேஷன் மையத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அருள்செல்வன் மற்றும் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ்கமிட்டி இணை இயக்குனர் பரமேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.