இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காசா மீது போர் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சியினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-22 07:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக உள்ள காசா மீது இஸ்ரேல் அடாவடியாக நடத்துகிற போரைக் கைவிடக் கோரி திண்டுக்கல்லில் இந்தியா கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநகரச்செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச்செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, என்.பாண்டி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். காங்கிரஸ் கட்சியின் மாநகரத்தலைவர் துரை.மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கிருஷ்ணசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மைதீன்பாவா, அன்பரசு, மதிமுக சார்பாக செல்வேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக அம்ஜாஅகமது, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக ஷேக்பரீத், திராவிடர் கழகத்தின் சார்பாக வீரபாண்டி, கருணாநிதி, ஜமா அத்துல் உலமா நகரச்செயலாளர் ஹஜ்ரத் பீர்முகமது, திமுக ஒன்றியச்செயலாளர் நெடுஞ்செழியன், சிபிஎம் நகரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றியச்செயலாளர் சரத்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News