கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விபரம்

கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து புகைப்படத்துடன் முழு விவரம் வெளியாகி உள்ளது.

Update: 2024-04-01 10:08 GMT

கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் புகைப்படத்துடன் முழு விவரம் வெளியாகி உள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 54 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், தமிழகத்தில் எதிர்பார்ப்பு மிகுந்த தொகுதியாக கரூர் பாராளுமன்ற தொகுதி கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 73 பேர். இதில் 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இரண்டு பேர் போட்டியிலிருந்து விலகி வாபஸ் பெற்று விட்டனர். தற்போது களத்தில் 54 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி,காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சாமானிய மக்கள் நல கட்சி, இந்திய கன சங்கம் கட்சி, ஊழலுக்கு எதிரான இயக்கம் மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். களத்தில் உள்ள மொத்த வேட்பாளர்களில் ஏழு பேர் பெண்கள், 47 பேர் ஆண்கள் போட்டியிடுகின்றனர்.

Tags:    

Similar News