தேர்தல் நடவடிக்கைகள் ஆட்சியர்கள் ஆய்வு
புதுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர்களும் தேர்தல் அலுவலர்களுமான மா. பிரதீப்குமார், ஐ.சா. மெர்சி ரம்யா அகியோர் ஆய்வு செய்தனர்.
இங்குள்ள மின்னணு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ள அறைகளை ஆய்வு செய்த திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மா. பிரதீப்குமார், தேர்தல் பணிகளில் பாரபட்சமின்றி அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற அலுவலர்களைக் கேட்டுக் கொண்டார். மேலும், தேர்தல் பணிகளின்போது பராமரிக்கப்படும்பதிவேடுகளையும், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களின் பதிவேடுகளையும் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வருவாய்க் கோட்டாட்சியர் பா. ஐஸ்வர்யா, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருமான க. ஸ்ரீதர், வட்டாட்சியர்கள் பரணி (புதுக்கோட்டை), விஜயலட்சுமி (கந்தர்வகோட்டை) ஆகியோரும் உடனிருந்தனர்