வாக்குச்சாவடி பொருட்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தோவாளையில் வாக்குச்சாவடி பொருட்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

Update: 2024-04-05 08:20 GMT

ஆய்வு

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  இன்று (05.04.2024) கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தை நேரில் பார்வையிட்டார். அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்தும், வருகை பதிவேடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் கன்னியாகுமரி சட்டமன்றத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள பொருட்களான வாக்காளர் பெயர் பட்டியல், முகவர்களின் கையேடு, ஸ்டிக்கர், உள்ளிட்டவை போதுமானதாக உள்ளனாவா என்பதையும் அலவலர்களிடம் கேட்டறியப்பட்டது.   தொடர்ந்து  வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்களால் மேற்கொள்ள வேண்டிய  பணிகள் தொடர்பான  வாகன ஒத்துகை நிகழ்ச்சியினை பார்வையிட்டார்கள். மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, ஊராட்சிகள்  உதவி இயக்குநர் சாந்தி, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன்,  துறை அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News