வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
கருப்பூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-05-08 02:15 GMT
சேலம் கருப்பூர் கரும்பாலை ஸ்ரீபூமிநகர் பகுதி சேர்ந்தவர் லட்சுமி (வயது 46) இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் விமல் குமரன் (வயது25). இவர் சேலத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்று குமரன் தென்அழகாபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் காலையில் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் இரும்பு கேட், கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ஒரு பவுன் மோதிரம், ரூ.10 ஆயிரம், வாட்ச்கள் கொள்ளை போய் இருந்தன. தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.