அரசியல் நாகரிகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? - ஜார்க்கண்ட் ஆளுநர் கேள்வி
பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி மதுரையில் உள்ள தனியார் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெங்களூரில் இருந்து மதுரை வந்தடைந்தார் மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: பாரதியார் போன்ற ஒரு மகாகவி அவரது இறப்பிற்கு பின்னால் அவரைப் போல் ஒருவர் இன்னும் தோன்றவில்லை எங்களைப் போன்றவர்களுக்கு நெஞ்சில் தேசிய கானல் ஒளிரவிட்டு எரிகிறது என்றால் அதற்கு பாரதியாரின் கவிதைகள் தான் காரணம். அப்படி ஒரு நல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்துள்ளேன்.
நான்கு மாநில தேர்தல் வருகிற நாடாளுமன்றத்தில் எதிரொலிக்காது திருமாவளவன் கூறிய குறித்த கேள்விக்கு: இது ஒரு செமி பைனல் என்றார். இப்போது மாற்றி சொல்கிறார். இதுதான் அவருடைய திறமை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு: எல்லோரும் சமம் என்றால் காஷ்மீருக்கு மட்டும் எப்படி தனி அந்தஸ்து கொடுக்க முடியும். தமிழகம் என்ன பாவம் பண்ணியது எல்லோரும் பொது என்று சொன்னால் காஷ்மீரும் பொது தான். அது தான் உச்சநீதிமன்றம் நிலைநாட்டி உள்ளது அதற்கான முழு முயற்சியை எடுத்த பாரத பிரதமர் மோடி அமித்ஷா அவர்களுக்கு கிடைத்த பெருமை.
தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளின் நிலை என்ன என்று ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறித்த கேள்விக்கு: தமிழக ஆளுநருக்கு கேள்வி எழுப்பியிருந்தால் ஆளுநர் அதற்கு தக்க பதில் அளித்திருக்கிறார். தமிழக அரசுக்கும் ஆளுநருக்குமான விரிசல் குறித்த கேள்விக்கு: கவர்னக்குரிய மரியாதையை தமிழக அரசு முதலிலேயே தந்திருக்கும் என்றால் வாடா போடா என்று பேசும் அளவிற்கு அமைச்சர் பெருமக்கள் இருப்பார்கள் என்றால் நமது அரசியல் நாகரிகம் எங்கே சென்று சென்று கொண்டிருக்கிறது என்று தமிழக மக்களாகிய நாம் புரிந்து நிக்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கான வெள்ள நிதி குறித்த கேள்விக்கு: நான் மத்திய அமைச்சராக இருந்திருந்தால் இதுவரைக்கும் தந்து இருந்த பணத்தை என்ன செய்தீர்கள் என்பதுதான் எனது கேள்வியாக இருக்கும் எத்தனை கோடி கொடுத்தாலும் அது மக்களுக்கு நன்மை செய்யாது இத்தனை கோடியை எப்படி நல்ல முறையில் செலவிட்டோம் என்பது தான் மக்களுக்கு பயன் தரும் என தெரிவித்தார்.