காங்கிரஸ் ஊடகம்- தகவல் தொடர்புத்துறை இணைத்தலைவராக ஜான் அசோக் நியமனம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை இணைத்தலைவராக ஜான் அசோக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூரில் உள்ள தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூகமேம்பாட்டு நிறுவனங்களின் துணைத்தலைவர் ஜான் அசோக் வரதராஜன். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை இணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான நியமன உத்தரவை ராகுல்காந்தி ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சி யின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள் ளார்.
ஜான் அசோக் வரதராஜன், அம்பேத்கர் சட்டக்கல்லூ ரியில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவில் உள்ள பபெல்லோ பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் விஞ்ஞானமும், பிரான்ஸ் நாட்டில் நிர்வாக மேலாண்மை படிப்பையும் முடித்துள்ளார். ஐ.நா. மிஷன் அலுவலகத்தில், ஐ.நா.தூதரின் தலைமையிலான அமைதிக்குழுவில், அரசியல் விவகாரங்களை கவனிக்கும் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
. பின்னர் 2009-ம் ஆண்டு முதல் தந்தை ரோவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு நிறுவனங்க ளின் துணைத்தலைவராக பொறுப்பேற்று நிர்வகித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கும் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இவருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.