12 ஜோதிர்லிங்க இலவச கண்காட்சி

ஓசூர், பேகேப்பள்ளியில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் 12 ஜோதிர்லிங்க கண்காட்சி நடந்தது.

Update: 2024-06-18 02:09 GMT

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பேகேப்பள்ளி எழில்நகரில்,பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் புதிய பாடசாலை திறப்புவிழா மற்றும் 12 ஜோதிர்லிங்க கண்காட்சி, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சமுதாயத்திற்கான ஆன்மீக அறிமுக நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும்விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு மண்டல பொறுப்பாளர் சரோஜா தலைமை வகித்தார்.ஓசூர் கிளை தலைவர் ராமலிங்கம்,தொழிலதிபர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக ஜிஎஸ்டி மத்திய கலால் வரித்துறை உதவி ஆணையர் ராஜேஷ்,ஓசூர் பேகேப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் அருண்குமார்,பெங்களூர் சஞ்சய் நகர் சென்டர் பொறுப்பாளர் சோனி ஆகியோர் பங்கேற்று 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சியை திறந்து வைத்து பேசினர்.

பெங்களூர் ஏலஹங்கா சென்டர் பொறுப்பாளர் விஜயலட்சுமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.இதில் சோமநாதர், மல்லிகார்ஜுனர், மகா காளேஸ்வர்,ஓங்காரேஸ்வரர்,கேதார்நாதர்,பீமாசங்கர்,கிருஷ்னேஸ்வர், ராமநாதசுவாமி,நாகேஸ்வர், வைத்தியநாதர்,திரியம்பகேஸ்வர்,விஸ்வநாதர் ஆகிய 12 ஜோதிர்லிங்கம் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த கண்காட்சியை பேகேப்பள்ளி,எழில்நகர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சென்று ஜோதிர்லிங்கத்தை வழிபட்டனர்.

Tags:    

Similar News