கள்ளகுறிச்சி : கபடி வீரர் அடித்துக் கொலை

கள்ளகுறிச்சி அருகே மது அருந்திய போது ஏற்பட்ட தகராற்றில் கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-31 09:36 GMT
போலீசார் மோப்பநாய் விசாரணை .
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்  அம்மச்சியார் கோயிலை சேர்ந்தவர் கண்ணன் (41). கபடி வீரர் இவர் ஏற்பட்ட ஒரு விபத்து காரணமாக தற்போது கபடி விளையாட செல்வதில்லை. கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கண்ணன் நேற்று இரவு மது வாங்கிக் கொண்டு, பொட்டல்குளம்  கால்வாய்கரை செல்லும் சாலையில் நின்று மது குடித்து உள்ளார். அங்கே மேலும்  இரு வாலிபர்கள் மது அருந்திக்கொண்டு இருந்தனர். போதை ஏறி அந்த நிலையில் வாலிபர்களுக்கும் கண்ணனுக்கு இடையே வாக்குவாத ஏற்பட்டு, இதில் ஆத்திரமடைந்த இரு வாலிபர்களும் அருகே கிடந்த செங்கல்லால் - கண்ணனின் தலையில் அடித்து கொலை செய்தனர்.  பின்னர் தப்பி ஓடி விட்டனர் இதனை கண்ட அப்பகுதியினர் ஈத்தாமொழி  போலீசருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை செய்தவர்கள் கண்ணனின் நண்பர்களா? அல்லது வேறு நபர்களா என விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News