விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
சின்ன காஞ்சிபுர்த்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-27 14:20 GMT
விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
சின்ன காஞ்சிபுரம், கண்ணப்பன் தெருவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி, சில மாதங்களாக நடந்து வந்தது. திருப்பணி முடிந்து, கடந்த 23ம் தேதி, கணபதி பூஜையுடன் யாகம் துவங்கியது. நேற்று காலை மகா பூர்ணாஹூதி முடிந்து பின் கலசம் புறப்பாடு நடந்து, காலை 9:15 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும், மஹா அபிஷேகம் நடந்தது.