கன்னியாகுமரியில் மீண்டும் களமிறங்கும் விஜய் வசந்த்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்.பி விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-03-24 04:07 GMT
விஜய் வசந்த்

நாடாளுமன்ற தொகுதி பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. கன்னியாகுமரி  தொகுதியில்  காங்கிரஸ் வேட்பாளராக மீண்டும் விஜய் வசந்த் போட்டியிடப் போவதாக அந்த கட்சியின் மேலிடம் நேற்று இரவு அறிவித்துள்ளது.  விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.  40 வயதான விஜய் வசந்துக்கு நித்யா விஜய் என்ற மனைவியும், ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக விஜய் வசந்த் தற்போது உள்ளார்.   சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர், லண்டனில் எம் ஐ பி ஏ படித்தவர். தற்போது வசந்த் அண்ட் கோ வில் பங்குதாரராகவும் இருக்கிறார். இவருக்கு ஒரு சகோதரனும் சகோதரி உண்டுவிஜய் வசந்த் எம் பி யின் தந்தை எச். வசந்தகுமார். இவர் வசந்த் அன்கோ நிறுவனர் ஆவார்.  2019 ஆம் ஆண்டு கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கொரோனா காலத்தில் வசந்தகுமார் திடீர் மரணம் அடைந்தார். இவர் மறைவால் காலியான தொகுதியாக கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி அறிவிக்கப்பட்டு, பின்னர் நடந்த  இடைத்தேர்தலில்  விஜய் வசந்த் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News