குமரியில் கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமர மீனவர்கள் செல்லவில்லை.

Update: 2024-06-08 07:12 GMT
கரை ஒதுக்கிய கட்டு மர வள்ளங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தேங்காபட்டணம், குளச்சல் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மீன்பிடித் துறைமுகத்தில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இடிமின்னலில் சிதறி ஓடினர்.   

இதற்கிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 12ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பலத்த காற்றுவிசை என்றும்,  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.      

இதை அடுத்து குமரி மாவட்ட கட்டுமர மீனவர்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியுள்ளனர். கடந்த 2 வாரத்துக்கு பின்பு ஒரு வாரமாக கட்டுமரங்களில் மீண்டும் மீன் பிடித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் கட்டு மரங்கள் கடலுக்கு செல்லவில்லை. ஒரு சில கட்டு மரங்கள் தடையை மீறி கடலுக்கு சென்றன.

Tags:    

Similar News