கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி உதை!
கோவையில் நிலத்தை பத்திரப்பதிவு செய்யாத நிலையில், பணத்தை திருப்பிக் கேட்டவரை சரமாரியாக தாக்கினர்.
Update: 2024-01-13 07:55 GMT
கோவை:ராமநாதபுரம் 80 அடி சாலை அருணாச்சலம் தேவர் வீதியில் வசித்து வரும் ஹரிபிரசாத் கட்டுமான பணி தொழில் செய்து வருகிறார்.கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள எஸ்.எம். இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதர் என்ற ஊழியர் மூலம் மூன்று லட்சம் ரூபாய் பணத்தை இரண்டு தவணைகளாக கொடுத்து இரண்டரை சென்டி இடத்தை கிரயம் செய்ய கூறியுள்ளார்.ஸ்ரீதர் பணத்தை பெற்று கொண்டு பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதால் ஹரிபிரசாத் மீது சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.நேற்று முன்தினம் ஒலம்பஸ் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீதரை கண்ட ஹரிபிரசாத் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.அப்போது ஸ்ரீதர் அலைபேசி மூலம் தனது நண்பர்களை அழைத்த நிலையில் சம்பவ இடத்தில் மூவரும் ஹரி பிரசாத்தை ஹெல்மெட் மற்றும் கைகளால் சரமாரியாக தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனை அடுத்து ஹரிபிரசாத் அளித்த புகாரின் பேரில் மூவர் மீது வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.