திருச்சி அய்யப்பன் கோவிலில் 5-வது கும்பாபிஷேக விழா

நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்;

Update: 2023-12-09 01:09 GMT

ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் 39-வது மண்டல பூஜை கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாகசாலையில் பூா்வாங்க பூஜைகள் நடைபெறுகின்றன. பூா்வாங்க பூஜைகள் நடைபெற்ற நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெற்றது. கேரள தந்திரிகள் மற்றும் சிவாச்சாரியார் புனித நீரை எடுத்து வந்து கலசங்கள், கொடி மரம் மற்றும் ஏனைய தெய்வங்கள் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சங்கத்தினா் செய்து வருகின்றனர். அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்பேரில் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Tags:    

Similar News