குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் கூட்டம்
திங்கள்நகரில் நடந்த குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குமரி மாவட்டம் திங்கள்நகரில் உள்ள குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் ஆன்றோ சர்ச்சில் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் ஏசு ரெத்தினராஜ், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசி சுபாசிங் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் பிஎஸ்பி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், நெய்யூர் பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா, பேரூர் செயலாளர்கள் ரெஜூலின் ராஜகுமார், சுஜெய் ஜாக்சன், நிர்வாகிகள் அருள்பிரவின், வாணியக்குடி வில்சன், சுஜன், ஜெய்வின் ராஜா, பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழக கொடி ஏற்றி, இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது. கலைஞர் நூற்றாண்டு விழா கழக உறுப்பினர் அட்டைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக சென்று சேர நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலி இந்தியா என்ற கூட்டணி வெற்றிக்காக சூராவளி பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வது. நடைபெற இருக்கின்ற கூட்டுறவு சங்க தேர்தலில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றியத்தில் அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களிலும் திமுக சார்பில் போட்டியிடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கல்லுக்கூட்டம் பேரூராட்சி வார்டு கவுன்சிலரும், பேரூர் திமுக பொருளாளருமான டோமினிக் ததேயுஸ் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் அணி நிர்வாகி லீமா கில்டா நன்றி கூறினார்.