ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் குருத்தோலை பவனி
ஆத்தூர்,புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருளப்பன்,உதவி பங்கு தந்தை ரஞ்சித்குமார் தலைமையில் குரு தோலை பவனி ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
Update: 2024-03-24 06:22 GMT
ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது குருத்தோலை ஞாயிறு என்பது இயேசு கிறிஸ்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கிறிஸ்த்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரிக்கின்றனர். பாடுகளின் குருத்து ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இயேசு இறந்து உயிர்த்தெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) க்கு முந்திய ஞாயிறு வரும்.ஆகும் இந்நிகழ்வானது ஆத்தூர்,புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அருளப்பன்,உதவி பங்கு தந்தை ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கிருஸ்துவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி பவனியாக கோயில் வளாகத்திற்குள் வந்து குருத்தோலை ஞாயிறினை அனுசரித்தனர்