மதுவால் ஏற்பட்ட குடும்ப தகராறில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், மங்கலம் பகுதியில் குடும்ப தகராற்றால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-26 15:22 GMT

தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சஜூ.கூலித்தொழிலாளி.அவரது மனைவி சுமி.சஜூவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம்.மேலும் சரிவர வேலைக் கும் செல்வதில்லை. இந்த நிலையில் நேற்று காலை சஜூ மீண்டும் குடித்து விட்டு வந்து சுமியுடன் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுமி, தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் மனவேதனையடைந்த சஜூ திடீரென வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி னார். அப்போது வீட்டிலிருந்த சஜூவின் பெற்றோர் உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சஜூ விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சஜூ தக்கலை அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் அங்கு செல்வதற்குள் சஜூ பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் பதறியடித்துக் கொண்டு சுமி ஓடி வந்தார். அங்கு சஜூவின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து சுமி குலசேக ரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இன்று வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News