தாழக்குடியில் குளத்தில் தொழிலாளி சடலம்: கொலையா?
தாழக்குடியில் குளத்தில் தொழிலாளி சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி அருகே உள்ள கனக மூலம் புதுகுடியிருப்பை சேர்ந்தவர் சுயம்பு மகன் வெங்கடேஷ் (33). இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளி. தாய் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் தன்னுடைய அண்ணன் முத்துக்குட்டி என்பவர் உடன் வசித்து வந்தார்.
கடந்த 2 வருடங்களாக சோழபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுரையில் இருந்து வேலைக்கு வந்த ஒரு பெண்ணுடன் குடும்ப நடத்தி வந்தார். அந்த பெண் கோழி பண்ணைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையில் அந்த பெண் ஒரு மாதத்திற்கு முன்பு வெங்கடே சை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வெங்கடேசை திடீரென காணவில்லை.
உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது அவருடைய மோட்டார் சைக்கிள் மற்றும் தேங்காய் வெட்டும் அரிவாள் போன்றவை அந்த பகுதியில் உள்ள ஆலடி குலத்தின் கரை அருகே கிடந்தது. சற்று தொலைவில் வெங்கடேசனுடைய செல்போன கிடந்துள்ளது.
இதை எடுத்து அவர் குளத்தில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த உறவினர்கள் அந்த குளத்தில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை பின்னால் ஆரல்வாய்மொழி போலீசருக்கு தகவல் கொடுத்து அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையிலே உறவினர்கள் மீண்டும் அந்த குளத்தில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் குளத்தில் நடுவில் தாமரை செடிகளுக்கு இடையே வெங்கடேஷ் பிணமாக கிடந்தார். உடலில் காயங்கள் இருந்துள்ளன.
இதனை தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சில நாட்களாக மூன்று பேர் வெங்கடேஷ் - ஐ துரத்துவதாக தன்னுடைய உறவினர் ஒருவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.