கன்னியாகுமரியில் லட்சக்கணக்கில் பண மோசடி

கன்னியாகுமரியில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக மாவட்ட மீது எஸ்பி இடம் புகார் மனு

Update: 2024-03-08 06:47 GMT
மாவட்ட எஸ்பி அலுவலகம் 
கன்னியாகுமரியில் உலக தமிழ் அமைப்புகள் சார்பில் பூங்கா மற்றும் ரிசார்ட்  அமைப்பதாக கூறி தமிழக முழுவதும் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் மீது எஸ்பி இடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த தங்கராஜ், புதுக்கோட்டை மாவட்டம் தனலட்சுமி மணிமாறன், திருச்சி சேர்ந்த கிருஷ்ணன், கமுதியை  சேர்ந்த மோகன் தாஸ் ஆகியோர் தரப்பில் கன்னியாகுமரி மாவட்ட எஸ் பி - டம் தனித்தனியாக அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-  கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடியை சேர்ந்த 70 வயது நபர் தமிழ் மற்றும் கடல் கொண்ட குமரி குறித்து இயக்கம்  நடத்தி வருவதாகவும், இதில் சர்வதேச நாடுகளை சேர்ந்த தமிழ் அமைப்புகள் பங்கேற்று உள்ளதாகவும், இந்த இயக்கம் சார்பாக பல்வேறு அமைப்புகள் இணந்து பூங்கா, ரிசார்ட்  அமைக்க உள்ளதாக கூறி பல லட்ச ரூபாய் தவணையாக வாங்கிய வாங்கியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படாததால் பணத்தை திருப்பி கேட்டதாகவும், ஆனால் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News