குமரி மாவட்டத்தில் வக்கீல்கள் வேலை நிறுத்தம்

தமிழை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-07 10:18 GMT

போராட்டம் 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாதபுரம், குழித்துறை, இரணியல், பூதப்பாண்டி ஆகிய ஐந்து நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.       இதன் காரணமாக சுமார் 2000 வழக்கறிஞர்கள் பணிக்கு செல்லவில்லை. நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். வக்கீல்கள் சிதம்பரதாணு,  மரிய ஸ்டீபன், சோபியா, சங்க பொருளாளர் முருகன் மற்றும்  பிரேம்குமார், ஹரி உட்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் வேலை நிறுத்தம் காரணமாக நீதிமன்றங்கள் வெறிச்சோடியது.

Tags:    

Similar News