செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி

மேம்பாலத்தின் இரு பகுதிகளிலும் தலா 20 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி துவங்கி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.;

Update: 2024-05-13 15:12 GMT

செய்யாறு பாலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு பாலாறு மற்றும் வேகவதி ஆறுகள் பாய்ந்து ஓடுகிறது. குறிப்பாக பாலாறு மற்றும் செய்யாறு ஆறுகளின் குறுக்கே மேம்பாலங்கள் இல்லாமல் தரைப்பாளர்களாக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.

இதனால் பருவ மழை காலங்களில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனை தவிர்க்க பாலாற்றின் குறுக்கே செவிலிமேடு மற்றும் குருவிமலை பகுதியில் இரண்டு உயர் மற்ற பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 2005 முதல் மீண்டும் மற்ற பகுதிகளில் அதாவது செய்யாற்றின் குறுக்கே பருவ மழை காலங்களில் தரை பாதங்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Advertisement

தற்காலிகமாக அதனை சரி செய்து பொதுமக்களுக்கு பொது போக்குவரத்தை தமிழக நெடுஞ்சாலை துறை மேற்கொண்டது. அதனை எடுத்து கடந்த 2017 - 18 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர், மாகரல் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூபாய் 23.66 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒயர் மட்ட பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த உயர்மட்ட பாலம் 278 நீளமும் 15 மீட்டர் அகலமும் 12 கண்கள் கொண்டதாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேம்பாலத்தில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு சற்று போதிய வெளிச்சம் இல்லாத காரணம் ஏற்பட்டதாகவும் மீண்டும் இந்த பகுதியில் மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன பேரில் தற்போது மேம்பாலத்தின் இரு பகுதிகளிலும் தலா 20 எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி துவங்கி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று மின் இணைப்பு அளிக்கப்பட்டவுடன் மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சத்துடன் விபத்து இன்றி செல்ல வழிவகுக்கும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News