ராமநாதபுரம் மீனவர்கள் விடுதலை
ராமநாதபுரம் மீனவர்களை சிறைப்பிடித்த நிலையில் இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடைப்பெற்ற நிலையில் அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார் நீதிபதி சஜீத்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 09:27 GMT
ராமநாதபுரம் மீனவர்கள் விடுதலை
ராமநாதபுரம் மீனவர்கள் விடுதலை
ராமநாதபுரம் பாம்பனிலிருந்து 2 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள், தலைமன்னார் அருகே கடந்த ஜன. 16-ம்தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் இரு படகுகளையும் பறிமுதல் செய்து, 18 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சஜீத், மீனவர்கள் 18 பேரும் இலங்கை எல்லைக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.