பைக்கில் மது கடத்தியவர் கைது
தென்காசி மாவட்டம் , ராமசாமிபுரம் பைக்கில் மது கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.;
Update: 2024-05-22 02:15 GMT
மதுவிற்றவர் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே ராமசாமிபுரம் நடுவூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த தேவைப்பட்டினத்தை சேர்ந்த கருப்பையா மகன் பேச்சியப்பன்(40) மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து 27 மது பாட்டில்கள், 1350 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.