லோடு வேன் விபத்து

லோடு வேன் டிரைவரின் அஜாக்கிரதையால் அரசு பஸ் மோதி செவிலியர் பலியானார்.

Update: 2024-05-22 08:56 GMT

லோடு வேன் டிரைவரின் அஜாக்கிரதையால் அரசு பஸ் மோதி செவிலியர் பலியானார்.


புதுக்கோட்டை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தி வயது (44) செவிலியரான இவர் புதுக்கோட்டை மறவப்பட்டியில் தங்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு மொபட்டில் சென்றார் டிவிஎஸ் கார்னர் பகுதியில் சென்ற போது சாலையோரம் பால் லோடு இறக்கி கொண்டிருந்த வேன் டிரைவர் கீழே இறங்குவதற்கு ஆக திடீரென கதவை திறந்தார் அப்போது வேன் கதவு மீது எதிர்பாராத விதமாக மோதி கீழே நிலை தடுமாறி விழுந்த ஜெயந்தி எதிரி வந்த அரசு பஸ் மோதியது. இதில் உடல் நசங்கி ஜெயந்தி அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News