சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் லோகோ அறிமுக விழா
திருச்சி மாவட்டம் சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கலைத் திருவிழாவின் பெயர் மற்றும் அதன் லோகோ அறிமுக விழா இன்று நடைபெற்றது.;
லோகோ அறிமுக விழாவில் கலந்து கொண்டவர்கள்
திருச்சி மாவட்டம்.சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாபெரும் கலைத் திருவிழாவின் பெயர் மற்றும் அதன் லோகோ அறிமுக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
பல்கலைக்கழக மாணவர்களின் கொண்டாட்டம் மற்றும் ஆரவாரங்களிடையே அனந்தரா கலைத் திருவிழாவின் பெயரை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் அறிவித்து அதன் லோகோவை அறிமுகப்படுத்தினார். பின்னர் நடைபெற்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் டீ ஜே ஆகியவை அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தன.
இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் திருமதி அனந்தலட்சுமி கதிரவன், நிர்மல் கதிரவன், பல்கலைக்கழக முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த அனந்தரா கலை நிகழ்ச்சி மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் பல்கலைக்கழக வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.