வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி
வாலாஜாபாத் அருகே முன்னே சென்ற லாரி மீது கனரக லாரி மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெண்குடி மேட்டுத்தெருவை சேர்ந்த குமரவேல் என்பவர் சொந்தமாக லாரி வைத்து, கட்டுமான பொருட்களை புறநகர் பகுதிக்கு எடுத்து செல்லும் பணிகளை தொழிலாக மேற்கொண்டு வருகிறார்.
இவருக்கு உதவியாக இவரது மகன் பொன்னுராஜ் பணிபுரிந்து வந்த வேளையில், இன்று அதிகாலை 2 மணிக்கு பொன்ராஜ் ஆர்ப்பாக்கத்தில் இருந்து கருங்கல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வெங்குடி பகுதியில் முன்பே சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரி திடீரென கோளாறு ஏற்பட்டதால், திடீரென வேகம் குறைந்தது.
அந்த நேரத்தில் பின்னால் வந்த கனரக லாரியை ஓட்டி வந்த பொன்னுராஜ் , வேகத்தைக் கட்டுபடுத்த இயலாத நிலையில் லாரியின் பின்பக்கம் பலத்த சத்தத்துடன் மோதியது.இதில் லாரியை ஓட்டி வந்த பொன்னுராஜ் லாரிக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவம் அறிந்து உடனடியாக வாலாஜாபாத் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் பணிகளை மேற்கொண்டும், லாரியில் சிக்கி இருந்த பொன்னுராஜ் உடலை காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர்,
இரண்டு ஜேசிபி , ஒரு கிரேன் உதவியுடன் வீட்டு உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொந்த ஊர் அருகே சாலை விபத்தில் மகன் இறந்த செய்தியை கேட்டு தந்தை மற்றும் தம்பி உள்ளிட்டோர் கதறி அழுத காட்சி சோகத்தை பிழியச் செய்தது.