மதுரை பிரபல தனியார் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழப்பு

மதுரையில் கார் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பிரபல தனியார் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்.

Update: 2024-06-17 16:33 GMT

உயிரிழந்த தலைமை ஆசிரியை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கார் டயர் வெடித்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மதுரை பிரபல தனியார் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்தார்... மேலும் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை திருநகரில் வசித்து வரும் ரமேஷ்(57), விருதுநகர் மாவட்டம் வேளாண்மை விற்பனை பிரிவு இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெனோவா இவாஞ்சலின் (55) மதுரை அமெரிக்கன் கல்லூரியின் எ.சி.ஆர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியையாக பணியாற்றுகிறார்.

பக்ரீத் விடுமுறையையொட்டி ஜெனோவா இவாஞ்சலின் சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நரிப்பையூர் கிராமத்திற்கு காரில் தனது கணவர் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்றுவிட்டு மதுரைக்கு திரும்பிச் சென்றபோது ரமேஸஷ் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது திருச்சுழி அருகே க.விளக்கு பகுதிக்கு கார் வந்தபோது முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டையிழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. விபத்தில் தலைமை ஆசிரியை ஜெனோவா இவாஞ்சலின் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

காரில் பயணித்த அவரது கணவர் ரமேஷ், உறவினர்களான நரிப்பையூரை சேர்ந்த ஜோஸ்னா(15), ராஜாநாயகம்(65) மதுரையை சேர்ந்த மெர்சடைஸ்(28), ஆகிய 4 பேர் படுகாயமடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து ம.ரெட்டியபட்டி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News