மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முதல்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Update: 2023-11-19 03:03 GMT
விருது
திருவண்ணாமலை வேலூர் சகோதய பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் குழந்தைகள் தின விழா வேலூரில் நேற்று நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கு பெற்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், ஒவ்வொரு பாடப் பிரிவிலும் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவப்படுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் அனிதா ராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. உன்னதமான மற்றும் தகுதியான குடிமக்களை உருவாக்குவதில் இவர் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார் என்று பாராட்டி விருது வழங்கப்பட்டது.