மீன்பிடித் தொழிலாளிடம் செல்போன் பணம்  திருடியவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், கோடி முனையில் மீன்பிடித் தொழிலாளிடம் செல்போன் பணம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-01 08:14 GMT
பணம் திருடியவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே கோடி முனையை சேர்ந்தவர் அந்தோணி மகன் சகாய அருள் நிஜன் (33) என்பவர் கடலில் மீன் பிடித் தொழில் செய்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு நிஜன் கோடிமுனை ஆலயம் முன்பு படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக சென்ற மர்ம நபர் சகாய அருள் நிஜனின் பாக்கெட்டில் இருந்து ரூ. 2,900 ரொக்கம் மற்றும் 2 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மறுநாள் காலை விழித்துப் பார்த்தபோது திருட்டு நடந்தது தெரிய வந்தது.

இது குறித்து அருள் நிஜன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் செய்து பணம் செல்போனை திருடி சென்றவர் குறித்து விசாரித்து வந்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சகாய அருள் நிஜனிடம் இருந்து திருடியது குறும்பனை பகுதி சேர்ந்த அபி மோன் (26) என்று தெரியவந்தது. போலீசார் அபிமானை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

Tags:    

Similar News