நெஞ்சு வலியில் மனம் உடைந்தவர் தூக்கு போட்டு தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம்,வீரநல்லூரில் நெஞ்சுவலியால் மனமுடைந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-05 02:25 GMT
தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாக மிகவும் அவதி அடைத்துள்ளார். இந்த நெஞ்சு வலிக்காக தீவிர சிகிச்சையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த நெஞ்சுவலியால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.