மது அருந்தியதை கண்டித்த மனைவி - கணவன் எடுத்த விபரீத முடிவு
கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் மது அருந்தியதை கண்டித்ததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-01-26 09:32 GMT
சின்னசேலம் அடுத்த கனியாமூரை சேர்ந்தவர் மாயவன்,64; இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் வேலைக்கு போகாமல் மாயவன் தினம் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் வந்த மாயவனை அவரது மனைவி நல்லம்மாள் கண்டித்துள்ளார்.
இதில் கோபமடைந்த மாயவன், வீட்டிலிருந்த நெல்லுக்கு அடிக்கும் பூச்சி மருந்தினை எடுத்து குடித்துள்ளார். உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.