திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருப்பத்தூர் அருகே எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் உறவினர்கள் கண்டுகொள்ளாத நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-15 06:32 GMT

தற்கொலை 

 திருப்பத்தூர் மாவட்டம், கண்ணால பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (60).இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகன்கள் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாளுக்கு எலும்புருக்கி நோய் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நோய்க்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மனைவி மற்றும் மகன்கள் யாரும் இவரை கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதனால் மனமுடைந்த பெருமாள் தருமபுரி மேம்பாலம் அருகே தண்டவாளத்தில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   உறவினர்கள் கண்டுகொள்ளாத நிலையில் முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News