நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகன மோதி பலி
சங்ககிரி அருகே நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகன மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;
Update: 2024-05-31 17:20 GMT
பலியானவர்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் நடந்து சென்றவர் மீது இரு சக்கரவாகனம் மோதியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.... சங்ககிரி, மாவெளிபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துசாமி மகன் குஞ்சுபையன் (60).
இவர் சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலை பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்காக நடந்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.