திருவாரூர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
Update: 2023-11-27 08:39 GMT
கஞ்சா விற்றவர் கைது
திருவாரூர் நகரில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த திருவாரூர் பனகல் சாலை அழகிரி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் பாபுவை (26) போலீசார் கைது செய்தனர் .மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர்.