பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.

Update: 2023-12-08 11:12 GMT

பேரணியில் ஈடுப்பட்டவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (08.12.2023) பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பேனர்கள் ஏந்தி திரளான பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் என பெண்கள் பேரணியாக கலந்துக்கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு அறிவியல் பூங்கா வரை பேரணி நடத்தப்பட்டது. முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பாலின சமத்துவ உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

ஒன்றிய அமைச்சர், ஊரக வளர்ச்சி துறை அவர்களால் GBV. 2.20 "Nayi Chetna" பிரச்சாரம் (பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான பிரச்சாரம்-2.0 நவம்பர்-25 துவங்கப்பட்டு, மாவட்டம், வட்டாரம் மற்றும் ஊராட்சிகளில் நவம்பர்-25 முதல் டிசம்பர்-23 வரை நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோலப்போட்டி, விழிப்புணர்வு நாடகங்கள், பேரணிகள், பட்டிமன்றங்கள், பேச்சுப்போட்டிகள், பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு திரைப்படங்கள் திரையிடுதல் போன்ற நிகழ்ச்சிகள் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சிகள் மற்றும் வட்டாரங்களில் நடத்தப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பா.அ.ஸையித் சுலைமான், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மீனாம்பிகை, உதவி திட்ட அலுவலர்கள் ரவி எல்லப்பன்,ராஜீவ்காந்தி, ஜான்சன், ரவிசந்திரன், பாரதி மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய வள பயிற்றுநர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News