பறக்கும் படை சோதனையில் ரூ.1.12 லட்சம் பறிமுதல்
சீர்காழி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,12,000 பறிமுதல் செய்யப்பட்டது.;
Update: 2024-03-19 01:46 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள்
தேர்தல் நடத்தை அவையில் உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுப்பட்டனர் அப்போது சீர்காழி இருந்து சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை கண்காணிப்பு குழு உதவி இயக்குனர் ராஜராஜன் பணத்தை பறிமுதல் செய்தார், விசாரணையில் சென்னை சவுகார்பேட்டை சேர்ந்த பிரகாஷ் எலக்ட்ரிக்கல் பொருள் விற்பனையாளர் என்பதும் விற்பனை செய்த பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்து எடுத்து செல்வதும் தெரியவந்தது