வாணியம்பாடியில் திட்ட பணிகளுக்கு எம்பி பூமி பூஜை

வாணியம்பாடியில் ரூ.5 கோடி 56 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

Update: 2024-01-08 14:53 GMT

பூமி பூஜையில் பங்கேற்ற எம்பி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 5 கோடி 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் அனந்த் கலந்து கொண்டு நகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு பகுதியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்ட பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கோணமேடு பகுதியில் ரூபாய்13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிட பணிகளை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இதனை தொடர்ந்து இக்பால் சாலையில் ஆத்துமேடு பகுதியில் பாலாறு கிளை ஆற்றின் குறுக்கே ரூபாய் 3 கோடி 6 லட்சம் மதிப்பீட்டிலும், சி.எல்.சாலை - ஓம் சக்தி கோயில் அருகில் பாலாறு கிளை ஆற்றின் குறுக்கே ரூபாய் 1 கோடி 70 லட்சம் மதிப்பீட்டில் பாலங்கள் கட்ட பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து 11 வது வார்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் கழிவறைகள் கட்ட பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், நகர திமுக செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதி குமார் , ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News