மினி டைடல் பார்க் பணிகள் : ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-05-17 06:46 GMT
தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மினி டைடல் பார்க் தரைத்தளம் மற்றும் 4 தளங்களுடன் லிப்ட் வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மினி டைடல் பார்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் உடனிருந்தார்.