சில்லறை கட்சிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது-டி.ஆர்.பி.ராஜா

திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அண்ணாமலைக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி.

Update: 2024-03-25 15:51 GMT

டி ஆர் பி ராஜா

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் மற்றும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செயல் வீரர் கூட்டத்திற்கு பின்பு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டியளித்தார். அப்போது கோவை மக்களவைத் தொகுதி வெற்றி வாய்ப்பு அட்டகாசமாக இருக்கிறது எனவும் எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்க அற்புதமான முறையில் கூட்டணி கட்சியினர் களப்பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு எதிரில் அதிமுக என்ற இயக்கம் இருக்கிறது அதை பாருங்கள் அதிமுக என்ற பிரதான கட்சி என்ன சொல்கிறது என்பதற்கு பதில் சொல்லலாம் சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.தேர்தலுக்காக 95 லட்ச ரூபாய் செலவு செய்யலாம் என இருக்கின்றது, இயக்கத்தில் கட்சி தொண்டர்கள்,நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும், அதனால் எங்களுக்கு செலவு ஆகும் எனவும் பாஜக கட்சி அண்ணாமலைக்கு எதுவும் இல்லாததால் அவருக்கு ஒரு பைசா செலவு இல்லை என்று நினைக்கிறேன் என தெரிவித்தார். ஊடகங்கள் எங்களை திசைதிருப்ப வேண்டும் என நினைக்கின்றனர் எங்களுடைய எதிரி அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக களத்தில் இருக்கிறது அதில் நாங்கள் கவனம் செலுத்தி ஜெயிக்க வேண்டும் எனவும் எங்களை சுற்றி ஓடிக் கொண்டிருப்பவர்களை பார்ப்பது கவனசிதறலாகும் எனவும் களத்தில் இருக்கும் எதிரியை வீழ்த்தி உதயசூரியன் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து பேட்டியளித்த கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் களம் சிறப்பாக இருப்பதாகவும் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.தண்ணீர் பிரச்சனை பரவலாக இருக்கின்றது இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சிப்போம் எனவும் விவசாயிகளின் கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News