காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-04-21 05:40 GMT

காணாமல் போன வியாபாரி சடலமாக மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த கூசாலிப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த ராஜாமணி மகன் அருட் செல்வம் (40). தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தினசரி சந்தையில் காய்கனி கடை நடத்தி வரும் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 12 வயதில் மகனும், ஒன்றை வயதில் மகளும் உள்ளனா். கடந்த 16ஆம் தேதி காலை 6 மணிக்கு சித்ரா காய்கனி கடைக்கு சென்றார் அதைத் தொடா்ந்து வீட்டை விட்டுச் சென்ற அருட் செல்வம் வீடு திரும்பவில்லை எனக்கூறி அவரது மனைவி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்நிலையில் கோவில்பட்டி-கடலையூா் சாலையில் உள்ள ஊா்க்காவல் சாமி கோயில் அருகே உள்ள பாலத்துக்கு அடியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அவா் காணாமல் போன அருட்செல்வம் என்பது தெரியவந்தது. மது அருந்தும் பழக்கமுடைய அருட் செல்வம் மது அருந்திய நிலையில் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த நிலையில் இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Tags:    

Similar News