எவனூர் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ
எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ இளங்கோ.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 02:44 GMT
சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவனூர் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ, க. பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் கருப்பசாமி, நல்லுசாமி, இளவனூர் ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி மாவட்ட கல்வி அலுவலர் காமாட்சி, பள்ளியின் தலைமை ஆசிரியை கயல்விழி,பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 37- மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ.