நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

திருப்பத்தூர் அருகேமேம்பாலம் அமைக்கப்பட்டு காலங்காலமாக பயன்படுத்தி வந்த வழியை தடை செய்யப்பட்டதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல்.

Update: 2024-03-01 11:05 GMT

அரசு பேருந்து சிறை

திருப்பத்தூர் மாவட்டம் காவேரிப்பட்டு கிராமத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு காலங்காலமாக பயன்படுத்தி வந்த வழியை தடை செய்யப்பட்டதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியல். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் இங்கு கொட்டாறு ஆறு உள்ளது இந்த ஆற்றின் நடுவே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் அமைக்கப்பட்டதன் காரணமாக ஒரு பிரிவினர் காலம் காலமாக இருந்த வழியை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மற்றொரு பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் நூற்றுக்கு மேற்பட்டோர் புத்துக்கோயில் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் சாலையில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் ஈடுபட்டனர். மேலும் இந்தச் சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து வந்து உடனடியாக உங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News