சாலையோரம் மண் அணைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் !
உயரமாக உள்ள சாலையின் இருபுறமும் மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-16 06:22 GMT
மண் அணைக்க கோரிக்கை
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் இருந்து, கருப்படிதட்டடை ஊராட்சிக்கு செல்லும் பிரதான சாலைக்கு, கடந்த மாதம் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலையின் தரை மட்டத்தில் முக்கால் அடி முதல், 1 அடி உயரத்திற்கு உயரமாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலையின் இருபுறமும் சரிவர மண் அணைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது உயரமான சாலையில் இருந்து, சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, விடுபட்ட இடங்களில் உயரமாக உள்ள சாலையின் இருபுறமும் மண் அணைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.