குடிநீர் தொட்டியை இடித்த மர்ம நபர்கள் - போலீஸ் விசாரணை

அரியம்போடு கிராமத்தில் குடிநீர் தொட்டி மர்ம நபர்களால் இடித்து அகற்றம். போலீசார் விசாரணை.

Update: 2024-03-17 11:25 GMT

போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பேரூராட்சி 1-ம் வார்டுக்குட்பட்ட அரியம்போடு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி சார்பில் சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் பேரூராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் அந்த குடிநீர் தொட்டியை இரவு நேரத்தில் இடித்து அகற்றி உள்ளனர்.இது குறித்து பொன்மனை பேரூராட்சி செயல் அலுவலர் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். குடிநீர் தொட்டியை இடித்து அப்புறப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News