நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம்
திருவாரூர் மாவட்டம், காட்டூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Update: 2024-02-19 05:06 GMT
திருவாரூர் மாவட்டம், காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது .
தொடர்ந்து கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசிய பொழுது இந்துத்துவா கொள்கையை சொல்லி இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் மோடிக்கு தேர்தல் பயம் இருந்தால் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஐந்தாவது முறையாக அமலாக்கத்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எனவே வரவிருக்கின்ற மக்களவை தேர்தலில் வெற்றி அடைய செய்ய திமுகவினர் மக்களிடம் மத்திய மோடி ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.